“எனக்கு கோவிட்-19 சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்து, 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்தக் காலகட்டத்தில் எனது பிசியோதெரபிஸ்ட் டாக்டர். குகுலோத் பிரியங்கா மேற்கொண்ட அமர்வுகள் நான் குணமடைவதில் மிக முக்கியப் பங்காற்றியது, எனக்கு சோதனையில் நெகடிவ் என முடிவு வந்த பிறகு உடனடியாக என் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவியது.
அனைத்திற்கும் மேலாக, அந்தக் காலகட்டத்தில் அவர் எனக்குக் கற்பித்த பயிற்சிகள் என் வாழ்நாள் முழுவதும் எனக்கு உதவியாக இருக்கப் போகிறது. நீங்கள் மிகச்சிறந்த பணியை மேற்கொண்டுள்ளீர்கள், மேடம்.
- சுபீர் குமார்
"எனக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருந்த போது, ஊக்கமளிக்கும் அமர்வுகளை அளித்த சுப்ரியா ஜி.ஆர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த கடினமான நாட்களில், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனச்சோர்வுகளில் இருந்து மீண்டும் வர இது எனக்கு மிகவும் உதவியது.
இந்த அமர்வுகளை அவர் மிகவும் உற்சாகவும் சரியான நேரத்திலும் எடுத்தார். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருக்கும் அப்பல்லோ குழுவிற்கும் என் வாழ்த்துக்கள்"
- அஜய் குப்தா
"டாக்டர் ஷப்பிர் பிசியோ அவர்களுடனான என் அனுபவம் சிறப்பானதாக அமைந்தது. கோவிட்-19 தொற்றின் போது சுவாச பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எங்கள் வசதிற்கேற்ப அவர் அமர்வை ஏற்பாடு செய்து கொள்வார்! இந்த மொத்த அனுபவமும் மிகவும் நன்றாகவும், ஊடாடும் வகையிலும், பயனுள்ளதாவும் இருந்தது. மிக்க நன்றி !!"
- சுராஜ் போய்